மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஜெய்ப்பூரில், விவேகானந்தா விரிவுரை அரங்க வளாகம்: மத்திய கல்வி அமைச்சர் திறப்பு

Posted On: 13 OCT 2020 7:20PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் உள்ள மாலவியா தேசிய தொழில்நுட்ப மையத்தில், விவேகானந்தா விரிவுரை அரங்க வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் பொக்கிரயால், ‘‘ஜெய்ப்பூரில் கட்டுப்பட்டுள்ள இந்த விவேகானந்தா விரிவுரை அரங்க வளாகம், இந்தியாவில் மட்டும் அல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய அரங்கம் என்றும், இதில் உள்ள 48 வகுப்பறைகள் மூலம்  ஒரே நேரத்தில் 6792 மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்’’ என்றார். தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், 3 லட்சத்து 66 ஆயிரம் சதுர அடியில், ஜெய்ப்பூர் பாரம்பரிய கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் பாதிப்பை குறைக்பதற்காக, இப்போதைக்கு மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை ஆன்லைன் மூலமாகவும், தொலைதூர கல்வி மூலமாக கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும், விவேகானந்தா விரிவுரை அரங்கத்தில் உள்ள 48 வகுப்பறைகளும், இ-வகுப்பறைகளாக செயல்படும் எனவும் அமைச்சர் திரு. ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664088

**********************



(Release ID: 1664161) Visitor Counter : 84