தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பெங்களூர் ராஜாஜிநகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முறையற்ற மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதாக, சில தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட செய்திக்கு இஎஸ்ஐசி மறுப்பு

Posted On: 13 OCT 2020 5:27PM by PIB Chennai

பெங்களூர் ராஜாஜிநகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முறையற்ற மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதாக, சில தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டதையடுத்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனமான இஎஸ்ஐசி இந்தச் செய்தியை  மறுத்துள்ளது.

இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகள் சிறப்பான முறையில் வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் தான் கொவிட் தொற்றுக்காக முதலில் பிரத்யேக சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை சுமார் 60690 நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. தொலைக்காட்சி சேனலில் வெளியான செய்திக்கு மாறாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், கையுறைகள் மற்றும் மருந்துகள் போதிய அளவு மருத்துவமனையில்  கையிருப்பில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற செய்திகளை வெளியிடும் போது அதன் உண்மைத்தரத்தை ஆராய்ந்த பின்னரே மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இஎஸ்ஐசி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664034

**********************


(Release ID: 1664143) Visitor Counter : 124