பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட் நேரத்திலும் அதிகளவிலான ஆர்டிஐ மனுக்கள் மீது நடவடிக்கை
Posted On:
13 OCT 2020 5:53PM by PIB Chennai
கொவிட் -19 நேரத்திலும், கடந்த 6 மாதங்களாக, அதிகளவிலான ஆர்டிஐ மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய பணியாளர் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்டிஐ) சட்டம் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் 15 ஆண்டு நிறைவை முன்னிட்டு, மத்தியமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘‘கடந்த நிதியாண்டின் மார்ச் முதல் செப்டம்பர் வரை 76.49% ஆர்டிஐ மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் 2020-21ம் நிதியாண்டின் இதே காலத்தில் 93.98% ஆர்டிஐ மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மொத்த வந்த 11,716 ஆர்டிஐ மனுக்களில், 8,962 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டன. ஆனால் இந்தாண்டில் மொத்தம் வந்த 8,528 மனுக்களில், 8015 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டன.
கொரோனா தொற்று முடக்க காலத்திலும், மத்திய தகவல் ஆணையம் உறுதியுடன் செயல்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணையில், காணொலி காட்சி உட்பட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால், அதிகளவிலான மனுக்களுக்கு பதில் அளிப்பது சாத்தியமானது.
ஆர்டிஐ சட்ட அமலாக்கத்தை, மேலும் வலுப்படுத்த, விரைவில் இணைய கருத்தரங்கு/ பயிலரங்குகளை நடத்துவதற்கான சாத்தியங்களை மத்திய தகவல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664041
**********************
(Release ID: 1664130)
Visitor Counter : 204