நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கோரி விண்ணப்பம்
Posted On:
13 OCT 2020 6:11PM by PIB Chennai
துவரை மற்றும் உளுந்தின் அறுவடை காலம் நெருங்கி வந்த போதிலும், கடந்த சில நாட்களாக இந்த பருப்பு வகைகளின் சில்லறை விலை கடந்த ஆண்டை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அக்டோபர் 12 வரை நாடெங்கும் துவரம் பருப்பின் விலை 23.71 சதவீதமாகவும், உளுத்தம் பருப்பின் விலை 39.10 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்தின் சில்லறை விலையை குறைக்கும் முயற்சியாக, துவரம் பருப்பு ஒரு கிலோ 85 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதுவரை ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, பிகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கோரியுள்ளன. மற்ற மாநிலங்களும் வரும் நாட்களில் இது போன்று விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அதிகரித்து வரும் சில்லறை விலையை கட்டுப்படுத்தும் விதமாக அதன் கையிருப்பிலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை திறந்த வெளிச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கச் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664050
**********************
(Release ID: 1664126)
Visitor Counter : 202