ஆயுஷ்

ஆயுஷ் திட்டத்திற்கான மண்டல மூல மருந்துக் களஞ்சியம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 13 OCT 2020 3:40PM by PIB Chennai

ஆயுஷ் திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூல மருந்துக் களஞ்சியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் மருத்துவத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தாவர வாரியத்துடன் இணைந்து, ஆயுஷ் அமைச்சகம், தேசிய மூல மருந்துக் களஞ்சியத்தையும், மண்டல மூல மருந்துக் களஞ்சியங்களையும் உருவாக்கியுள்ளது.  சென்னையில் உள்ள தேசிய சித்தமருத்துவ நிறுவனத்தின் தலைமையில், சென்னை மண்டல யுனானி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னையிலுள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்  ஆகியவை கூட்டாக செயல்படும் என்று தேசிய மருத்துவத் தாவர வாரியம் அறிவித்திருந்தது. தென்  மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மூல மருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணம் செய்யவும், சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் களஞ்சியம் ஏதுவாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663989

**********************(Release ID: 1664029) Visitor Counter : 179