உள்துறை அமைச்சகம்

விரல்ரேகை பிரிவு இயக்குனர்களின் 21வது அகில இந்திய மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.ஜி கிஷன் ரெட்டி தொடக்கம்

Posted On: 13 OCT 2020 1:56PM by PIB Chennai

விரல் ரேகை பிரிவு இயக்குனர்களின் 21வது அகில இந்திய மாநாட்டை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.கிஷன் ரெட்டி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேசிய குற்ற ஆவண பிரிவு -சைபர் பரிசோதனை கூடமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  பேசிய மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி, குற்றம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசு பொறுத்துக் கொள்வதில்லை என்றார்மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில், குற்றங்கள் நடைபெறாத இந்தியாவை உருவாக்குவதுதான், எங்கள்  நோக்கம் என அமைச்சர்  திரு.கிஷன் ரெட்டி கூறினார்குற்றங்களை ஜாதி, இனம், மதம் மற்றும் மண்டல  ரீதியாக அரசு பார்ப்பதில்லை எனவும்மனிதநேயம், அமைதி , பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு எதிரான   குற்றங்களை  அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி கூறினார்.

நாடு முழுவதும் காவல்துறை நவீன மயமாக்கத்துக்கு மத்திய அரசு 2019-20ம் நிதியாண்டில் 780 கோடி வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663961

********

(Release ID: 1663961)



(Release ID: 1663988) Visitor Counter : 181