புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஆகஸ்ட், 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்திக் குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

Posted On: 12 OCT 2020 5:30PM by PIB Chennai

தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள் இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12-ஆம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தயாரிப்புத் தொழிற்சாலைகள் நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தகவல்கள் ஆதார முகமைகளுக்குக் கிடைக்கும்.

கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார நடவடிக்கைகளில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேற்றம் காணப்படுகிறது.

ஆகஸ்ட் 2020-க்கான  தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடு,  2011-12 என்னும் அடிப்படையில் 116.1 ஆக இருக்கிறது.  சுரங்கங்கள், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளின்ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்தி குறியீடுகள் முறையே 83.0, 117.4 மற்றும் 162.7 ஆக உள்ளன.

தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின் படி இந்த துரித மதிப்பீடுகள் இனிவரும் அறிக்கைகளில் மாற்றங்களைக் காணும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663732

**********************


(Release ID: 1663856) Visitor Counter : 107