மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பஞ்சகவியப் பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் "காமதேனு தீபாவளி அபியான்" பிரச்சாரத்தைத் தொடங்கியது தேசிய காமதேனு ஆயோக்
प्रविष्टि तिथि:
12 OCT 2020 6:35PM by PIB Chennai
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்த கௌமய கணேஷா பிரச்சாரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, பஞ்சகவியப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் "காமதேனு தீபாவளி அபியான்" பிரச்சாரத்தைத் தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட விளக்குகள், மெழுகுவர்த்திகள், ஊதுவர்த்திகள், சாம்பிராணிப் பொருட்கள், விநாயகர் மற்றும் லட்சுமியின் உருவச்சிலைகள் ஆகியவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளிப் பண்டிகையின்போது, 11 கோடி குடும்பங்களில் பசு சாணத்தால் செய்யப்பட்ட 33 கோடி விளக்குகளை ஏற்ற தேசிய காமதேனு ஆயோக் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663766
**********************
(रिलीज़ आईडी: 1663851)
आगंतुक पटल : 231