மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் மற்றும் கட்டிடங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்

Posted On: 12 OCT 2020 4:56PM by PIB Chennai

பதிந்தா மக்களைவை உறுப்பினர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதலின் முன்னிலையில், பதிந்தா மாவட்டத்தின் குட்டா கிராமத்தில் அமைந்துள்ளா பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், பதிந்தாவின் அதி நவீன புதிய வளாகம் மற்றும் கட்டிடங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்.

ரூ 203.78 கோடியில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 10 கட்டிடங்களையும், பல்கலைக்கழகத்தின் இலச்சினை நினைவுச்சின்னத்தையும் மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தற்சார்பு இந்தியா என்பதே முன்னேறுவதற்கான ஒரே பாதை என்பதை உலகின் தற்போதைய நிலவரம் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்றார். உலகின் அறிவு மற்றும் புதுமைகளின் மையமாக இந்தியாவை மாற்றும் நமது லட்சியத்தை அடைய தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டும் என்று அவர் கூறினார்.

40,000-க்கும் அதிகமான மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த இடமாக வளாகத்தை உருவாக்கியுள்ள பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், பதிந்தாவின் குடும்பத்தினரை அமைச்சர் பாராட்டினார்.

உள்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவதை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் நவீன வளாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663717

***********************


(Release ID: 1663790) Visitor Counter : 91