நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்


கொள்முதல் செய்யப்படும் மாநிலங்களிலும், புதிதாகக் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்களிலும், நெல்லுக்கான கொள்முதல் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது

அக்டோபர் 10ஆம் தேதி வரை 3.33 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவரையும், 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரையும், 75.45 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 11 OCT 2020 6:19PM by PIB Chennai

2020-21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதை அடுத்து, கடந்த காலங்களைப் போலவே, இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

கொள்முதல் செய்யப்படும் மாநிலங்களிலும், புதிதாகக் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்களிலும், நெல்லுக்கான கொள்முதல் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வரை, இந்திய உணவு நிறுவனமும், பிற அரசு முகமைகளும் இணைந்து 7159.39 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 37.92 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை 3.22 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 30.70 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதைப்போல 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10-ஆம் தேதி வரை அரசு, தன் முதன்மை முகமைகளின் மூலம் 3.33 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 459.60 மெட்ரிக் டன் அவரையை, தமிழ்நாடு மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 326 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதவைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 10-ஆம் தேதி வரை 7545 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 24863 பேல்களை இந்திய பருத்தி நிறுவனம் 5252 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663545

-----



(Release ID: 1663580) Visitor Counter : 124