நிதி அமைச்சகம்

அரசின் தங்க பத்திர திட்டம் 2020-21(தொடர் 7)-வெளியீட்டு விலை

Posted On: 09 OCT 2020 7:38PM by PIB Chennai

2020 அக்டோபர் 09-ம் தேதியிட்ட இந்திய அரசின் அறிவிக்கை No.4(4)-B(W&M)/2020 –க்கு ஏற்ப, 2020 அக்டோபர் 20 என்ற தீர்வுத்தேதியுடன்  2020, அக்டோபர் 12-16 காலகட்டத்துக்கு அரசின் தங்க  பத்திரங்கள் 2020-21 (தொடர் 7) வர்த்தகம் தொடங்கப்பட உள்ளது. சந்தா காலகட்டத்துக்கு உட்பட்ட பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் ரூ.5,051(ஐந்தாயிரத்து ஐம்பத்து ஒரு ரூபாய் மட்டும்) ஆக இருக்கும்

இந்திய ரிசர்வ் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ.50(ஐம்பது ரூபாய் மட்டும்) தள்ளுபடி வழங்கப்படும். இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.5,001 (ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் மட்டும்) ஆக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663224

 ----




(Release ID: 1663393) Visitor Counter : 144