பாதுகாப்பு அமைச்சகம்

லேவில் உள்ள கார்டுங்லா பள்ளத்தாக்கில் இந்திய விமானப்படையினர் ஸ்கை டைவிங்

Posted On: 09 OCT 2020 6:21PM by PIB Chennai

வீரர்களின் உடல்நல மற்றும் மனநல தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய விமானப்படை அவர்களுக்கு சாகச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறதுஅக்டோபர் 8 2020 ஆம் தேதி இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, லேவில் உள்ள கார்டுங்கிலா பள்ளத்தாக்கின் 17982 அடி உயரத்தில் இருந்து, வீரர்கள் ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். திரு கஜனாத் யாதவா மற்றும் ஏகே திவாரி ஆகியோர் சி-130ஜே விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்தனர். இவ்வளவு உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்வதில் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும் அவற்றை வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்துள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663187.

----- 


(Release ID: 1663306) Visitor Counter : 201