அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புளோரைடு மற்றும் இரும்பை நீக்கி அதிக அளவில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கியுள்ளது
Posted On:
09 OCT 2020 4:36PM by PIB Chennai
குடிதண்ணீரில் புளோரைடு மற்றும் இரும்பு போன்ற பொருட்கள் கலப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை மனதில் கொண்டு, புளோரைடு மற்றும் இரும்பை நீக்கி அதிக அளவில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கியுள்ளது.
இது குறித்து சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, துர்காப்பூர், இயக்குநர், பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணி மற்றும் அந்நிறுவனத்தின் மேற்பரப்பு பொறியியல் மற்றும் உராய்வியல் துறை முதன்மை விஞ்ஞானி டாக்டர் பிரியபிரதா பானர்ஜி ஆகியோர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர்.
இரும்பு என்பது மனித உடலில் அதிகமாக காணப்படும் ஒன்றாக இருக்கும் போதிலும், முக்கிய உயிரியல் செயல்பாடுகளுக்கும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் அது பங்காற்றும் போதிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, தண்ணீரில் அதன் அளவு 0.3 பிபிஎம்மை தாண்டினால், அது உடல் நலத்துக்கு தீங்கானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரில் இரும்பின் அளவு 0.3 பிபிஎம்மை தாண்டினால் கல்லீரல் நோய்கள், இதயத்துடிப்பில் ஒழுங்கின்மை மற்றும் நரம்பு குறைபாடுகள் ஆகியவை ஏற்படலாம் என்று பேராசிரியர் ஹரிஷ் ஹிராணியும், டாக்டர் பிரியபிரதாவும் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று, 1.5 பிபிஎம்முக்கும் குறைவான கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான புளோரைடு பற்கள் மற்றும் எலும்புகளை சரியான அளவில் வலுப்படுத்துவதற்கு அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவை அனைத்தையும் மனதில் கொண்டு அதிக அளவில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எளிதில் கிடைக்கும் பொருட்களான மணல், ஜல்லி ஆகியவற்றை கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறனோடு செயல்படும்.
குறைந்த செலவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மூன்று கட்டங்களாக தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த அமைப்பு, அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தண்ணீரைச் சுத்திகரிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663134
-----
(Release ID: 1663214)
Visitor Counter : 135