பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

புதிய வேளாண் சீர்திருத்தங்கள், தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் இந்திய விவசாயிகளின் வாழ்க்கை முறையை சுலபமானதாக மாற்றும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 08 OCT 2020 5:24PM by PIB Chennai

தில்லியின்  ராம்பன், உதம்பூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதிய வேளாண் சட்டம், புரட்சிகரமானது என்றும் இந்த சீர்திருத்தங்களினால் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் இந்திய விவசாயிகளின் வாழ்க்கை முறை சுலபமானதாக மாறும் என்றும் கூறினார்.

 

போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், இடைத்தரகர்கள் வரும் வரை அறுவடை செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் தேக்கி வைக்கும் நிலை இருந்து வந்தது என்று கூறினார்.

எனினும் இந்த புதிய சட்டத்தால் விவசாயிகள் நேரடியாகவே தங்கள் விளைபொருட்களை விற்க அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது  என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662761

----- 



(Release ID: 1662886) Visitor Counter : 99