மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புத்தாக்க மையத்தை மெய்நிகர் முறையில் மத்திய கல்வி அமைச்சர் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 08 OCT 2020 5:43PM by PIB Chennai

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வர்த்தக புத்தாக்க மையமான கியான் சர்க்கிள் வென்ச்சர்ஸை  மெய்நிகர் முறையில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' திறந்து வைத்தார்.

மத்திய உயர்கல்வி செயலாளர் திரு அமித் காரே, ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்பு தலைமை செயலாளர் திரு சதீஷ் சந்திரா, சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆட்சிமன்றக் குழுவின் தலைவரான திரு பாலா எம் எஸ், ஸ்ரீ சிட்டி தலைவர் திரு சீனிவாச சி ராஜு, ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜி  கண்ணபிரான் மற்றும் இதர அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பொக்ரியால், நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தி அளிப்பது புதுமையான கண்டுபிடிப்புகள் தான் என்றார். நாம் தற்சார்போடு இருப்பதற்கும், முன்னணியில் இருப்பதற்கும் புதுமைகளையும், தொழில் முனைதல்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கியான் சர்க்கிள் வென்ச்சர்ஸ் போன்ற புத்தாக்க மையங்கள் இளைஞர்களின் மனதில் தொழில் முனைதல் பற்றிய எண்ணங்களை உருவாக்கி, புதுமைகளை படைப்பவர்களாகவும், வெற்றிகரமான தொழில் அதிபர்களாகவும் அவர்களை ஆகும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662778  

----- 


(रिलीज़ आईडी: 1662815) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu