அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி 57-வது நிறுவன தினத்தை கொண்டாடியது

Posted On: 08 OCT 2020 5:07PM by PIB Chennai

புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி (கனிமம் மற்றும் தாதுப்பொருள் தொழில்நுட்ப நிறுவனம்) தனது 57-வது நிறுவன தினத்தை  மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இன்று கொண்டாடியது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டியின் 2019-20-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை அமைச்சர் வெளியிட்டார். மேலும், சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டியின் காணொளியையும் கருத்து பாடலையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்.

சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டியின் இணையதளத்தையும் மின் கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார். சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி தொடர்புடைய அனைவருக்கும் அதன் நிறுவன தினத்தை முன்னிட்டு டாக்டர் ஹர்ஷ்வர்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய பார்வை, சிந்தனைகள், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் விஞ்ஞானிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662752

-----


(Release ID: 1662809) Visitor Counter : 141