பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது: திரு தர்மேந்திர பிரதான்
21 ஆம் நூற்றாண்டில் இந்தியா, தன்னிறைவு அடையவும், உலகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவும் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2020 7:45PM by PIB Chennai
இந்தியாவை தன்னிறைவடையச் செய்து, செழிப்பாக்க அனைத்து குடி மக்களும் பாடுபட வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆத்மநிர்பார் பாரத் கட்டமைப்பு என்ற தலைப்பில் பஞ்சாப் ஹரியானா டில்லி வர்த்தகக் கூட்டமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் தயாரிப்புத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா, தன்னிறைவு அடையவும், உலகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ச்சி அடையவும், அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662453
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1662572)
வருகையாளர் எண்ணிக்கை : 132