வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான கூட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மிக முக்கிய தூண்களாக விளங்குகின்றன என்று திரு பியுஷ் கோயல் கூறினார்

Posted On: 07 OCT 2020 7:09PM by PIB Chennai

ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கூட்டு பொருளாதார வளர்ச்சி தலைமைத்துவ கூட்டத்தில் மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையேயான கூட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மிக முக்கிய தூண்களாக விளங்குகின்றன என்று கூறினார்.

சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாங்கள் பணி புரிவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். விரைவான பலன்களை அறுவடை செய்வதற்காக முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து தொடங்கலாம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் எங்கள்  உறவை நாங்கள் வலுப்படுத்தி இருக்கிறோம் என்று திரு கோயல் மேலும் தெரிவித்தார்.

பொறுப்புள்ள குடிமக்களாக சர்வதேச சவால்களை இணைந்து எதிர்கொள்ள தயாராக இருக்கும் இயற்கையான பங்குதாரர்களாக நாம் இருக்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662444 

                                                                ------ 



(Release ID: 1662570) Visitor Counter : 174