ஆயுஷ்

கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகா சார்ந்த தேசிய மருத்துவ நிர்வாக செயல்முறைகளை சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டனர்

Posted On: 06 OCT 2020 2:36PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யெசோ நாயக் ஆகியோர் இணைந்து கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகா சார்ந்த தேசிய மருத்துவ நிர்வாக செயல்முறைகளை மெய்நிகர் முறையில் இன்று வெளியிட்டனர்.

நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்ஷ் வர்தன், பல்துறை குழு ஒன்று அளித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த செயல்முறைகளை நிபுணர்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் தயாரித்து உள்ளதாக தெரிவித்தார்.

கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகா சார்ந்த தேசிய மருத்துவ நிர்வாக செயல்முறைகள் பெறுந்தொற்றுக்கு எதிரான நமது போரை மேலும் வலுப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

 

காணொலி மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றிய  திரு ஸ்ரீபத் யெசோ நாயக், இந்த செயல்முறைகளை வடிவமைப்பதற்காக வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை ஆயுஷ் அமைச்சகம் அமைத்ததாகவும், கொவிட்-19- கட்டுப்படுத்துவதில் ஆயுஷ் இடையீடுகளின் பங்கை புரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகளை அமைச்சகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662012

 

 

********

(Release ID: 1662012)



(Release ID: 1662025) Visitor Counter : 215