மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இன்று வெளியிட்டது

Posted On: 05 OCT 2020 6:58PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்/வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டது.

தனது டிவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்/வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' வெளியிட்டார்.

இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2020 அக்டோபர் 15-க்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

* உள்ளூர் நிலைமையின் அடிப்படையில், தொடர்புடைய பள்ளிகள்/நிலையங்களின் நிர்வாகங்களோடு கலந்தாலோசித்து அவற்றை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை எடுக்கலாம்.

 

* பள்ளியின் அனைத்து இடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

* அவசர காலக் குழு, பொது உதவிக் குழு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும்.

* தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும்.

* அறிவுறுத்தல்கள் தாங்கிய அறிவுப்புகளை போதுமான அளவில் வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661806

**********************


(Release ID: 1661841) Visitor Counter : 299