அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் பூர்வமான தரவு பகிர்தலுக்கு அரசு உயர் முக்கியத்துவத்தை அளிக்கிறது: பேராசிரியர் அசுதோஷ் சர்மா, செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

Posted On: 04 OCT 2020 6:20PM by PIB Chennai

 17-வது வருடாந்திர அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான வட்ட மேசையில் பேசிய இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல் பூர்வமான தரவு பகிர்தலுக்கு அரசு உயர் முக்கியத்துவத்தை அளிக்கிறது என்று கூறினார்.

இந்தியாவின் தேசிய தகவல் பகிர்வு மற்றும் அணுகுதல் கொள்கை மற்றும் அரசின் திறந்தநிலை தகவல் இணையதளத்தின் மூலம் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையில் அறிவியல்பூர்வமான தகவல்களை இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தரவுகள் தண்ணீரைப் போல அத்தியாவசியமானதாக மாறி வருகிறது, இதை நாங்கள் உலகத்தோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

2020 அக்டோபர் 3 அன்று ஜப்பானால் நடத்தப்பட்ட  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான வட்ட மேசையில் உலகெங்கும் உள்ள 50 நாடுகளில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661597

****************



(Release ID: 1661611) Visitor Counter : 157