தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேளாண் பட்ஜெட், கடந்த 10 ஆண்டில் 11 மடங்கு அதிகரித்து ரூ.1.34 லட்சம் கோடியாக உயர்வு : மத்தியமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர் தகவல்
Posted On:
03 OCT 2020 6:22PM by PIB Chennai
புதிய விவசாய சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்கு பயனளிக்கும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர் கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்த அமைச்சர், கடந்த 2009-10ம் ஆண்டில் ஐ.மு. கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, ரூ. 12,000 கோடியாக இருந்த விவசாய பட்ஜெட் 11 மடங்கு உயர்ந்து தற்போது ரூ.1.34 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார். இது பிரதமர் திரு.நரேந்திர மோடியின், விவசாயிகளின் நலனுக்கான உறுதியை வெளிபடுத்துகிறது என அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்வர் கூறியுள்ளார்.
பிஎச்டி வரத்தக சபை, ஏற்பாடு செய்த தேசிய மாநாடு நிகழ்ச்சியில், காணொலி காட்சிமூலம் பேசிய மத்திய அமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, நாட்டின் எந்த பகுதியிலும் விற்பதற்கான சுதந்திரத்தை அளிக்கும் நோக்கத்தில் புதிய வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். விவசாயிகள் மற்ற மாநிலங்களிலும், தங்கள் உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும் என திரு. சந்தோஷ் கங்வர் தெரிவித்தார். ஐ.மு.கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடுகையில், விவசாய உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்வர் தெரிவித்தார். நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் விதிமுறைகள் குறித்து அமைச்சர் திரு.சந்தோஷ் குமார் கங்வர் விரிவாக பேசினார். இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளை வரும் நாட்களில் தற்சார்புடையதாக மாற்றும் என்றார். 3 தொழிலாளர் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை தெரிவித்துள்ளதாக அமைச்சர் திரு. கங்வர் குறிப்பிட்டார்.
தொழிலாளர் நலன் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதோடு, தொழிலாளர் விதிமுறைகள் சட்டம், எளிதாக தொழில் தொடங்கும் சூழலையும் அதிகரிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு, மத்திய அரசுக்கு தொழிலதிபர்கள் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்குமாறு, அமைச்சர் திரு. சந்தோஷ் கங்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661365
****************
(Release ID: 1661585)
Visitor Counter : 155