பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின தொழில்முனைவோர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா
Posted On:
02 OCT 2020 7:59PM by PIB Chennai
பழங்குடி தொழில்முனைவோர் மேம்பாட்டுக்காக, ஒரு புதிய மூன்று ஆண்டு திட்டத்தை பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசாம்) ஆகியவை, கூட்டாக மேற்கொண்டுள்ளன. இத்திட்டத்தை, மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பழங்குடியினரின் சமூக-பொருளாதார மேம்பாடு தொடர்பான சிறப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, பழங்குடியினர் விவகார அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள, பல சிறப்பான மையங்களில் ஒன்றாக அசோசாம் நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கை நிறைவேற்றும் வகையில், பழங்குடியின சமுதாயத்தினரின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும், சமூக பொருளாதார வளர்ச்சியில், அவர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் முயற்சியில், தொழில்துறை உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. அர்ஜூன்முண்டா அழைப்பு விடுத்தார்.
மக்கள் தற்சார்புடையவர்களாக மாறும்போதுதான், நாடு தற்சார்பு உடையதாக மாற முடியும் என அவர் கூறினார். பழங்குடியினர் நலனுக்காக, பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறிய அமைச்சர், இந்த திட்டங்கள், பழங்குடியினரின் திறமைகளை மேம்படுத்தி, அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வுகள் வழங்குவதை அவர் வலியுறுத்தினார். அசோசம் அமைப்பின் புதிய முயற்சிகள், பழங்குடியினரின் நிலை மற்றும் பங்களிப்பை தேசிய மற்றும் சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா நம்பிக்கை தெரிவித்தார்.
பழங்குடியின விவகாரத்துறை அமைச்சக செயலாளர் திரு. தீபக் கண்டேகர் பேசுகையில், ‘‘பழங்குடியின சமுதாயத்தினருக்கு சிறந்த அறிவு மற்றும் திறமை இருப்பதாகவும், தொழில் முனைவு மேம்பாடு முயற்சிகள் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை உணர வைக்கும் என்றார். இதன் மூலம் அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுவர் எனவும், திரு.தீபக் கண்டேகர் கூறினார்.
அசோசம் அமைப்பின் தலைவர் டாக்டர் நிரஞ்சன் ஹிரானந்தானி பேசுகையில், ‘‘4.5 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பில் இருப்பதாகவும், தங்களின் சிறப்பு மையம் மற்றும் நவீன தொழில்நுட்ப மூலம், பழங்குடியின மக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661117
****************
(Release ID: 1661312)
Visitor Counter : 591