குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல், அரசியல், சமூக பிரச்னைகளுக்கு தீர்வுகாண காந்திய கொள்கைகளை புதுப்பிக்க வேண்டும் என்று துணைக்குடியரசுத் தலைவர் திரு. வெங்கைய்யா நாயுடு அழைப்பு விடுத்தார்.

Posted On: 02 OCT 2020 7:09PM by PIB Chennai

அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் அதே போல சுற்றுச்சூழல்  பிரச்னைகள் உலகில் பெருகி வருவதன் காரணமாக அவற்றுக்கு தீர்வுகாண காந்திய கொள்கைகளை புதுப்பிக்க வேண்டும் என்று துணைக்குடியரசுத் தலைவர் திரு. வெங்கைய்யா நாயுடு அழைப்பு விடுத்தார். உலகத்துக்கு இன்றைக்கு குணப்படுத்தும் தொடுகை தேவை. எனவே, காந்திய கொள்கைகளால் மட்டுமே அதனை தர முடியும் என்றும் கூறினார்.

சர்வதேச உறவுகளுக்கான இந்திய கவுன்சில் ஒருங்கிணைத்த காந்தி மற்றும் உலகம் என் தலைப்பிலான சர்வதேச வெப்பினாரில் முன்பே பதிவு செய்யப்பட்ட காணொலியின் வழியே துணைக் குடியரசுத் தலைவர் நிறைவுரை ஆற்றினார். காந்திஜியின் 150வது பிறந்த ஆண்டு விழாவின் இரண்டு ஆண்டு கொண்டாட்டத்துடன் முடிவடையும் இரண்டு நாள் வெப்பினார் நிகழ்வை சர்வதேச உறவுகளுக்கான இந்திய கவுன்சில் அமைப்பு ஒருங்கிணைத்தது. காலமற்ற தன்மை மற்றும் காந்திய மதிப்புகளின் இணக்கத்தை எடுத்துக்கூறிய துணை குடியரசுத் தலைவர் புதிய சவால்களை எதிர்கொளும் உலகத்தில் அவற்றுடன் இவைப் பொருந்திப் போகின்றன என்றார்.

தற்போதைய கோவிட் 19-பெருந்தொற்று குறித்து பேசிய திரு.நாயுடு, ஸ்பானிஷ் ஃப்ளூவின் போது 1918-ம் ஆண்டு இதே போன்ற சவாலை உலகம் எதிர்கொண்டபோது, அனைத்து மக்களின் குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ள வேண்டியதேவை இருக்கிறது காந்தி பேசினார் என்றார்.

ஏழைகளின் மீது அனுதாபம் காட்டாமல், அவர்களுக்கான உண்மையான பிரச்னைகளை அறிந்து, தேவைப்படுவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்தச் சோதனையான காலகட்டத்தில் அவர்களின் கஷ்டத்தைத் தணிக்க வேண்டும் என்று துணைக்குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் உலகளாவிய சுகாதார சவாலில் இருந்து ஒருவர் தம்மை பாதுகாத்துக் கொள்ள பராமரிக்க வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்ற காந்திஜி கூறிய ஆலோசனைகளையும் அவர் கவனத்தில் கொண்டார்.

ஐக்கியநாடுகள் சபையால், சர்வதேச வன்முறையற்ற தினமாக காந்தியின் பிறந்த நாள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுவதாக கூறிய துணைக்குடியரசுத் தலைவர், அமைதி என்பது முன்னேற்றத்துக்கான ஒரு முன் நிபந்தனை என்பது உலகத்துக்கான ஒரு நிலையான நினைவூட்டல் என்று கூறினார். உண்மை மற்றும் வன்முறையற்று இருத்தல் ஆகிய அவரது செய்தியின் மூலம் ஒரு புதிய வாழ்க்கை முறையை, அநீதிக்கு எதிரான ஒரு புதிய போராட்ட முறையை இந்த உலகத்துக்கு மகாத்மா காந்தி காட்டினார்என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661086

****************



(Release ID: 1661146) Visitor Counter : 194