சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலை விபத்தில் உதவி செய்பவர்களை காக்க விதிமுறைகள் வெளியீடு

Posted On: 01 OCT 2020 12:10PM by PIB Chennai

சாலை விபத்துக்களில் உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விதிமுறைகள், உதவி செய்பவர்களுக்கான உரிமைகளை வழங்குகிறது. விபத்துக்களில் உதவி செய்பவர்கள் மதம், நாடு, ஜாதி அல்லது பாலினம் என எந்த வேறுபாடும் இன்றி மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என அந்த விதிமுறைகளில் விரிவாக கூறப்பட்டுள்ளது. உதவி செய்தவரிடம் எந்த போலீஸ் அதிகாரியோ அல்லது மற்றவர்களோ, பெயர், அடையாளம், முகவரி அல்லது வேறு எந்த விவரத்தையோ  கட்டாயப்படுத்தி கேட்க கூடாது எனவும், ஆனால், அவர் தானாக, முன்வந்து அவரைப் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் எனவும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத் திருத்தம்  2019-ல் சேர்க்கப்பட்டுள்ள  134 ஏ பிரிவில் உதவி செய்பவர்களுக்கான பாதுகாப்பு’  விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  இதில் உதவி செய்வோருக்கான உரிமைகள் அடங்கிய சாசனத்தைஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையும், ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழியில், நுழைவாயில் பகுதி மற்றும் இணையதளத்தில்  வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், உதவி செய்தவர்  தானாக முன்வந்து, விபத்து வழக்கில் சாட்சியாக மாற ஒப்புக் கொண்டால், அவரிடம் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி விசாரிக்க வேண்டும். 

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில், சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய பிரிவின் கீழ்விபத்தில் சிக்கியவர், உதவி செய்தவரின் கவனக்குறைவால் உயிரிழந்தால் கூட எந்தவித குற்ற நடவடிக்கையையும் சந்திக்க தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660551

 

*****



(Release ID: 1660623) Visitor Counter : 211