ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் 30 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.27 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழிக்கப் பட்டுள்ளது

Posted On: 30 SEP 2020 6:55PM by PIB Chennai

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு கரீப் கல்யான் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இத் திட்டத்தின் கீழ், கடந்த 13 வாரங்கலில் 30 கோடி மனித வேலை நாட்கள் அளவிற்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ரூ.27,003 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறைய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1,14,344  தண்ணீர் சேமிப்பு கட்டமைப்புகள், 3,65,075  கிராமப்புற வீடுகள், 27,446 கால்நடை தொழுவங்கள், 19,527  வேளாண் குளங்கள், 10,446  சமுதாய கழிப்பறை வளாகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மாவட்ட மினரல் நிதிகள் கீழ் 6727 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, 1,662 கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டுள்ளது, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கு 17,508 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, கிரிஷி விக்யான் கேந்திரங்கள் மூலம் 54,445 பேருக்கு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளன.



(Release ID: 1660599) Visitor Counter : 192