பாதுகாப்பு அமைச்சகம்
டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
28 SEP 2020 6:42PM by PIB Chennai
டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் கீழ் வழிப் பாதைகள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், அகாதமியின் மூன்று வளாகங்களுக்கு இடையே தடையற்றப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய இந்த கீழ்வழிப் பாலங்களைக் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பதற்கு 40 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது விநோதமாக உள்ளது என்று கூறினார். இப்போது பயிற்சி அதிகாரிகள் ஒரு வளாகத்தில் இருந்து இன்னொரு வளாகத்திற்கு எளிதாகச் செல்வதற்குப் போக்குவரத்து சிக்னல்கள் இடையூறாக உள்ளன. மேலும் பயிற்சி அதிகாரிகள் செல்லும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.
(रिलीज़ आईडी: 1659907)
आगंतुक पटल : 189