அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியலைப் பிரதிபலிக்கும் இமயமலை சந்திரா தொலைநோக்கியின் 20 ஆண்டு தினத்தைக் குறிக்கும் பயிலரங்கு
Posted On:
28 SEP 2020 4:49PM by PIB Chennai
கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் உள்ள லடாக் பாலைவனத்தில், கடும் குளிருக்கு இடையில், இருபது ஆண்டுகளாக, 2மீட்டர் விட்டம் கொண்ட கண்ணாடி இழை அகச் சிவப்பு இமயமலை சந்திரா தொலைநோக்கி செயல்பட்டு வருகிறது. இந்திய வானியல் ஆய்வகத்தில் இயங்கும் அது, இரவு நேர வானில் நிகழும் நட்சத்திர வெடிப்புகள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், எக்சோ கிரகங்கள் ஆகியவற்றைத் தேடுவதில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தொலைநோக்கி, பெங்களூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹொசகோட்டேயில் இயங்கி வரும் இந்திய வானியல் இயற்பியல் நிறுவனத்தின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் இருந்து பிரத்யேக செயற்கைக்கோள் தகவல் இணைப்பு மூலம் இயக்கப்படுகிறது. 20-வது பிறந்த நாளைக் கொண்டாடும் அதனிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 260 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தன்னாட்சி பெற்ற இந்த நிறுவனம் தனது 20-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில், செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இணையவழி அறிவியல் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Release ID: 1659896)
Visitor Counter : 272