பாதுகாப்பு அமைச்சகம்

ரூ 2,290 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலானக் குழு ஒப்புதல்

Posted On: 28 SEP 2020 4:25PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில், ரூ 2,290 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடம் இருந்து இவை கொள்முதல் செய்யப்படும்.

 

இந்தியப் பொருள்களை வாங்குதல் பிரிவின் கீழ், நிலையான உயர் அலைவரிசை தகவல் பெறும் (ரிசீவர்) இயந்திரங்களையும், திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதங்களையும் (SAAW) கொள்முதல் செய்ய பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

ராணுவம் மற்றும் விமானப்படையின் களப் பிரிவுகளில் தடையில்லா தொடர்பை உயர் அலைவரிசை வானொலி உறுதி செய்யும். இவை சுமார் ரூ 540 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். ரூ 970 கோடியில் கொள்முதல் செய்யப்படவிருக்கும் திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதங்கள் கடற்படை மற்றும் விமானப்படைக்கு வலு சேர்க்கும்.

 

மேலும், ராணுவத்தின் முன்களப் படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக, சுமார் ரூ 780 கோடி மதிப்புள்ள சிக் சாயர் துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


***
 



(Release ID: 1659875) Visitor Counter : 226