சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவக் கல்வியில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தம்: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது, இந்திய மருத்துவ குழு கலைக்கப்பட்டது

Posted On: 25 SEP 2020 4:34PM by PIB Chennai

நான்கு தன்னாட்சி பெற்ற வாரியங்களுடன் கூடிய தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்ததன் மூலம் மருத்துவக் கல்வித் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளது.

இதன் மூலம், பல தசாப்தங்களாக இருந்து வந்த இந்திய மருத்துவ குழு கலைக்கப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ கல்வி வாரியங்கள், மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம், நெறிமுறைகள் மற்றும் மருத்துவ பதிவு வாரியம் ஆகியவை தேசிய மருத்துவ ஆணையத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து சீர்திருத்தங்களின் மூலம் வெளிப்படையான தரமான மற்றும் பொறுப்பான அமைப்பாக மருத்துவ கல்வி முறை அமையும். இதுதொடர்பான அறிவிப்புகள் கடந்த இரவு, அதாவது 2020 செப்டம்பர் 24 அன்று, வெளியிடப்பட்டன.

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக எய்ம்சின் முன்னாள் பேராசிரியரான டாக்டர் எஸ் சி சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியை மூன்று வருடங்களுக்கு வகிப்பார். இதைத் தவிர 10 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659029



(Release ID: 1659092) Visitor Counter : 245