புவி அறிவியல் அமைச்சகம்
புயல்கள் மற்றும் வெள்ளம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தகவல்
प्रविष्टि तिथि:
24 SEP 2020 5:05PM by PIB Chennai
மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்தன் கூறியதாவது.
1891-2017 புள்ளிவிபரங்களில் படி வடக்கு இந்திய பெருங்கடலில் ஆண்டுக்கு சராசரியாக 5 புயல்களும், வங்க கடலில் 4 புயல்களும், அரபிக் கடலில் ஒரு புயலும் உருவாகியது. ஆனால் சமீப காலமாக வடக்கு இந்தியப் பெருங்கடலில் புயல்கள் அதிகரித்துள்ளது. அரபிக் கடலிலும் புயல்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் அரபிக் கடலில் 5 புயல்களும், வங்கக் கடலில் 3 புயல்களும் ஏற்பட்டுள்ளன.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்தாண்டில் 3056 கன மழை சம்பவங்களும், 554 மிக கன மழை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
தில்லியை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்ட நிலநடுக்கங்களை, ஆய்வு செய்த தேசிய பூகம்ப மையம், பூகம்பம் நிகழும் அதிர்வெண்ணில், எந்தவொரு உறுதியான காட்டவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில், தில்லியில் 26 நிலநடுக்கம் உட்பட 745 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நில அதிர்வில் ஏற்படும் எந்த அதிகரிப்பும் பெரிய பூகம்பம் ஏற்படக்கூடும் என்பதற்கான ஒரு அறிகுறியாக கூறுவது கடினம்.
(रिलीज़ आईडी: 1658807)
आगंतुक पटल : 133