விவசாயத்துறை அமைச்சகம்
மையப்படுத்தப்பட்ட வேளாண் இயந்திர சோதனை தளத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
24 SEP 2020 4:18PM by PIB Chennai
வேளாண் துறையால் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட வேளாண் இயந்திர சோதனை தளத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.
வேளாண் இயந்திர பரிசோதனை நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தவும், இயந்திரங்களின் ஒட்டுமொத்த பரிசோதனை மற்றும் மதிப்பிடுதல் செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் இந்த தளத்தை வேளாண் துறை உருவாக்கியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர சிங் தோமர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காகவும் வேளாண்துறையின் வளர்ச்சிக்காகவும் முழுவதும் உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்தார்.
அரசின் இந்த உறுதியின் தொடர்ச்சியாக வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கணிசமான அளவு அதிகரித்து உள்ளதாக அவர் மேலும் கூறினார். வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக பயிரிடுதல் பரப்பளவும், விளைச்சலும் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658678
----
(रिलीज़ आईडी: 1658725)
आगंतुक पटल : 221