பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைக் குறித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் செய்திக்குறிப்பு
Posted On:
24 SEP 2020 11:05AM by PIB Chennai
உத்தரகாண்ட் பிரிவை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரியான திரு சஞ்சீவ் சதுர்வேதியின் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞரான திரு மெகமூத் பராச்சாவின் நடத்தை குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து விரிவான உத்தரவை அளித்து, அவமதிப்பு கடிதத்தை வழங்கியது.
வருடாந்திர ரகசிய அறிக்கை குறித்த வழக்கில் திரு சஞ்சீவ் சதுர்வேதி சார்பாக ஆஜரான திரு மெகமூத் பராச்சா, தொடர்ந்து எதிர்தரப்பு வழக்கறிஞரை அவமானப் படுத்தும் விதமாகவும், தீர்ப்பாயத்தின் தலைவரை மிரட்டும் தொனியிலும் பேசிக் கொண்டிருந்தார்.
அவமதிப்பு கடிதம் வழங்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அவரது நடவடிக்கையில் எந்தவிதமான நியாயத்தையும் தீர்ப்பாயம் காணவில்லை.
இருப்பினும், இது போல் நடப்பது இதுவே முதல் தடவை என்பதால், இனிமேல் இவ்வாறு நடக்கக் கூடாது என்னும் கடும் எச்சரிக்கையோடு அவர் விடுவிக்கப்படுகிறார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1658538
---
(Release ID: 1658632)
Visitor Counter : 156