அணுசக்தி அமைச்சகம்

முன்மாதிரி ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் (பி.எஃப்.பி.ஆர்) 2022 ஆம் ஆண்டில் இயக்கப்படும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 22 SEP 2020 5:12PM by PIB Chennai

மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் ( பாவினி) கட்டியுள்ள முன்மாதிரி துரித வளர்ப்பு உலை (பி.எஃப்.பி.ஆர்) 2022 அக்டோபருக்குள் செயல்வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். அப்போது, பி.எஃப்.பி.ஆர் 500 மெகாவாட் மின்சக்தியை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.

 

தற்போது தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன, இதன் விளைவாக பி.எஃப்.பி.ஆர்-ஐ இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், பி.எஃப்.பி.ஆரின் பல்வேறு அமைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்களின் செயல்பாடுகளை முன்னேற்றிக் கொண்டிருக்கும்போது, ​​ஏராளமான தொழில்நுட்ப சவால்கள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகள் (பி.எஃப்.பி.ஆரின் முதல்-வகையான நிலை காரணமாக) ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளப்படுவதால், அதன் மூலம் செயலாக்கம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த சிக்கல்கள் அணுசக்தித் துறையின் வடிவமைப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657768

*****


(Release ID: 1658017) Visitor Counter : 154