சுற்றுலா அமைச்சகம்

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்கின் கீழ் “அங்கீகரிக்கப்பட்ட உணவு வகைகளுடன் சுற்றுலாத் தலங்களை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் இணைய கருத்தரங்குக்கு ஏற்பாடு

Posted On: 21 SEP 2020 11:48AM by PIB Chennai

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்கு தொடரில், கடந்த 19ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட உணவு வகைகளுடன்  சுற்றுலாத் தலங்களை  ஊக்குவித்தல்என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் பகுதியில் தனிச்சிறப்பான பாரம்பரிய உணவுகள் அங்குள்ள பருவநிலைக்கு ஏற்ற வகையில் உள்ளன. அங்கு விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள், மூலிகைகள் விதவிதமாக சமைக்கப்படுகின்றன.  இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் சுவையானது மட்டும் அல்ல, முற்றிலும் ஆரோக்கியமானவை. உணவுகளில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் மூலிகைகள் உடலில் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக் கூடியவை.

இந்த இணையக் கருத்தரங்கில்உத்தராஞ்சல், பஞ்சாப், மற்றும் தில்லி மாநிலங்களின் சில பாரம்பரிய உணவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.   இந்த இணைய கருத்தரங்கை, பேர்ட் குழும தலைவி திருமதி ராதா பாட்டியா, புதுதில்லி ரோசேட் ஹவுஸ் சமையல் கலைஞர்கள் திரு. அனுஜ் வாதவன், திரு. ஆனந்த் பன்வார், ரிஷிகேஷ் ரோசேட் கங்கை சமையற் கலைஞர் திரு.சேத்தன் ராணா  ஆகியோர் வழங்கினர்.

நாட்டின் பாரம்பரியம், நாகரீகம், கலாச்சாரம், மதம், பருவநிலை ஆகியவை உணவு தயாரிக்கும் விதத்தில் முக்கிய பங்கு வகிப்பதை திருமதி. ராதா பாட்டியா விளக்கினார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற சமையற் கலைஞர்கள் பலவிதமான உணவு வகைகளை நேரடியாக சமைத்துக் காட்டினர்.

எனது தேசத்தை பார் என்ற இணைய கருத்தரங்கின் தொடர்களை  யூடியூப்  இணையதளத்திலும், https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured மற்றும் சுற்றுலா துறை அமைச்சகத்தின் சமூக இணையதளங்களிலும் காணலாம்.

அடுத்த கருத்தரங்கு ‘‘ஊரக சுற்றுலா: பழங்காலத்திலிருந்து எதிர்காலம் வரை‘’ என்ற தலைப்பில் என்ற தலைப்பில் செப்டம்பர் 26ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.

முன்கூட்டியே பதிவு  செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

https://digitalindiagov.zoom.us/webinar/register/WN_6ydAovSPQtaSCTwzaaNwtw

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்- https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657169

***************



(Release ID: 1657194) Visitor Counter : 139