பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பணியிட மாற்றக் கொள்கை, தேசிய ஆள்தேர்வு முகமை மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள்

Posted On: 16 SEP 2020 5:33PM by PIB Chennai

 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த  மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார். 

 

அரசு வேலை தேடுவோரின் சுமைகளை குறைக்கவும், ஆள்தேர்வில் சமநிலையையும், ஒருங்கிணைப்பையும் கொண்டு வரவும், 2020 ஆகஸ்ட் 28 தேதியிட்ட உத்தரவின் மூலம் தேசிய ஆள்தேர்வு முகமையை அரசு அமைத்தது. இதன் மூலம் அனைத்து அரசுப் பணிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

 

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, இந்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள்/துறைகளும் தங்களுக்கென்று சொந்தமாக பணியாளர் இடமாற்றத்துக்கான வழிகாட்டுதல்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடமாற்றக் கொள்கையை பொது தளத்தில் அமைச்சகங்கள்/துறைகள் வைக்க வேண்டும்.

 

பொது மக்கள் குறை தீர்ப்பு முறை கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னேறி உள்ளது. 2017-இல் 18,66,124 மனுக்கள் பெறப்பட்டு, 17,73,020 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 7,55,952 நிலுவையில் உள்ளன.

 

2018-இல் 15,86,415 மனுக்கள் பெறப்பட்டு, 14,98,519 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 8,43,848 நிலுவையில் உள்ளன.

 

2019-இல் 18,67,758 மனுக்கள் பெறப்பட்டு, 16,39,120 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 10,72,486 நிலுவையில் உள்ளன.



(Release ID: 1655291) Visitor Counter : 65