மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தமிழகத்தை சேர்ந்த 3 பேராசிரியர்கள் உட்பட 12 பேருக்கு AICTE-ன் சிறந்த ஆசிரியர் விருது : மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்

Posted On: 15 SEP 2020 6:38PM by PIB Chennai

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) முதல் முறையாக விஸ்வேஸ்வரய்யா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உவாக்கியது. இந்த விருதை பெறுவதற்கு நாடு முழுவதும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இருந்து 12 பேராசிரியர்களை ஏஐசிடிஇ  தேர்வு செய்தது.

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.  தமிழகத்தின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை டாக்டர். ஆர்.மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் டாக்டர்.நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு விஸ்வேஸ்வரையா நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி. சகஸ்ரபுத்தே, துணைத் தலைவர் எம்.பி.பூணியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், நாட்டின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ‘‘இந்திய பொறியியல் துறையில் சர் மோக்‌ஷாகுண்டம் விஸ்வேஸ்வரையா முன்னோடியாக விளங்கியவர் என்றும் இந்தியாவின் மிக பிரபலமான பொறியாளர் என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது எனவும்  குறிப்பிட்டார்.

உயர்கல்வி நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம், தரம் மற்றும் பேராசிரியர்களின் செயல்பாடு என அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டார்.

 

விருது பெற்ற ஆசிரியர்களின் முழு விவரத்தை கீழே கண்ட இணைப்பில் பார்க்கவும்.

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1654638#.X2C_BNPSqHo.whatsapp

*****


(Release ID: 1654862) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Marathi , Hindi