பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினரின் பொருட்களை கண்டறிதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மேம்பாடு

प्रविष्टि तिथि: 14 SEP 2020 3:32PM by PIB Chennai

தனது துணை அமைப்பான இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பின் மூலம், 'பழங்குடியினரின் பொருட்களுக்கான மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான நிறுவன ஆதரவு' என்னும் திட்டத்தை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், இதர சந்தை மேம்பாட்டு நடவடிக்கைகளை தவிர, பழங்குடியினரிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்து சில்லறை சந்தைபடுத்துதல் செயல்பாடுகளிலும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

உலக கைவினைப் பொருட்கள், பழங்குடியினரின் ஜவுளிப் பொருட்கள், பழங்குடியினரின் நகைகள், பழங்குடியினரின் ஓவியங்கள், மூங்கில் பொருட்கள், மண்பாண்டங்கள், பரிசுப்பொருட்கள் புதுமையான பொருட்கள் மற்றும் இயற்கை உணவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தத் தகவல்களை பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் எழுத்துப்பூர்வமான பதிலின் மூலம் இன்று மக்களவையில் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1654021

**************


(रिलीज़ आईडी: 1654142) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Marathi , Assamese , Telugu