பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

உயிரி எரிபொருள் நிலையங்களை நிறுவுதல்

Posted On: 14 SEP 2020 2:20PM by PIB Chennai

உயிரி எரிபொருள்கள் -2018 குறித்த தேசிய கொள்கையை, மத்திய அரசு  2018, ஜூன் 4ம் தேதி  அறிவித்தது.  இந்த கொள்கை, நாடு முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பையும், டீசலில் 5% பயோ டீசலை கலப்பதை குறிக்கும் இலக்குகளை வகுத்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ், கடந்த 2013-14 ஆம் ஆண்டு, 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் கொள் முதல், 2018-19ம் ஆண்டில் 188.6 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

எரிபொருளில் கலப்பதற்கு எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்:

(i) கரும்பு சாறு மற்றும் சர்க்கரை / சர்க்கரை பாகில் இருந்து எத்தனால் உற்பத்தியை ஊக்குவித்தல்.

(ii) பல இடங்களில் இருந்து வரும் எத்தனாலுக்கு  விலையை நிர்ணயித்தல்.

(iii) எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வட்டி தள்ளுபடியை விரிவுபடுத்துதல்.

(iv) எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்காக, எத்தனாலை தடையின்றி கொண்டு செல்ல சட்டதிருத்தம்.

(v) எத்தனால் ஜிஎஸ்டி வரி 18%-லிருந்து 5% -மாக குறைக்கப்பட்டது.

(vi) எத்தனால் கலந்து பெட்ரோல் திட்டம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவு தவிர நாடு முழுவதும் நீட்டிப்பு.

(vii) எத்தனால் சேமிப்பு கிடங்கை மேம்படுத்துதல்.

(viii) நீண்ட கால அடிப்படையில் எத்தனால் கொள்முதல் கொள்கையை உருவாக்குதல்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653979

***********



(Release ID: 1654045) Visitor Counter : 109