எரிசக்தி அமைச்சகம்
பீகாரில் கிஷேன்கன்ச்-தர்பாங்கா 400 கிலோ வாட் மின்பகிர்வு கட்டுமானத்துக்கு மத்திய மின்துறை அமைச்சர் அடிக்கல்
Posted On:
13 SEP 2020 6:52PM by PIB Chennai
பீகார் மாநிலத்தில் உள்ள சகர்ஷா என்ற இடத்தில் கிஷேன்கன்ச்-தர்பாங்கா 400 கிலோ வாட் மின்பகிர்வு கட்டுமானத்துக்கு மத்திய மின்துறை அமைச்சர் திரு.ஆர்.கே. சிங் அடிக்கல் நாட்டினார். ரூ.100 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை, மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் செயல்படுத்துகிறது.
பவர்கிரிட் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்டிய திரு.ஆர்.கே.சிங், தேசிய மின்தொகுப்புடன், ஒவ்வொரு மாநிலத்தையும் இணைப்பதில், பவர்கிரிட் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது என தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான இந்த மின் பகிர்வு மூலம், பீகார் மாநிலம் குறைந்த செலவில் மின்சாரத்தை பெற முடியும் எனவும் அவர் கூறினார். கிஷேன்கன்ச் -தர்பாங்கா 400 கிலோ வாட் மின்பகிர்வு கட்டுமானத் திட்டம் நிறைவடைந்தவுடன் பீகாரின் சகர்ஷா மாவட்டத்தில் மின் விநியோக சூழல் மேம்படும். வடக்கு பீகாரின் குறைந்தழுத்த மின்சார பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் எனவும் அமைச்சர் திரு.ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653854
********
(Release ID: 1653955)
Visitor Counter : 130