எரிசக்தி அமைச்சகம்

மின்சாரம் இந்தியாவின் எதிர்காலம்; ஏழைகளுக்கு உதவ, சமையல் செய்வதற்கு மின்சாரத்தை மிகப் பெரிய அளவில் பயன்படுத்த திட்டம் : மின்வாரிய அமைச்சர் திரு. ஆர்.கே. சிங்

Posted On: 13 SEP 2020 5:59PM by PIB Chennai

ஏழைகளுக்கு உதவும் வகையில், அன்றாடம் சமையல் செய்வதற்கு மின்சாரத்தை மிகப் பெரிய அளவில் பயன்படுத்தும் திட்டத்தை நோக்கி அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய மின்துறை இணை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இது எரிபொருள் இறக்குமதியை குறைத்து தற்சார்பை நோக்கி நாட்டை கொண்டு செல்லும் நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

பீகார் மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள நபிநகரில் தேசிய அனல் மின்நிலைய நிறுவனம்(NTPC) கட்டிய வணிக வளாகம், மற்றும் என்டிபிசி ஊழியர்களுக்கான கேன்டீன் ஆகியவற்றை மத்திய மின்துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மின்துறையில் மத்திய அரசின் தொலை நோக்கு திட்டங்களை தெரிவித்தார்.

‘‘மின்சாரம் நாட்டின் எதிர்காலம். பெரும்பாலான கட்டமைப்புகள் மின்சாரம் மூலமே செயல்படும்.  சமையல் செய்வதற்கும் மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், மின் கட்டமைப்புகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் நாட்டின் எரிபொருள் இறக்குமதி குறையும்’’ என திரு. ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

ஏழைகளுக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி கொண்டுவந்த இலவச கேஸ் மற்றும் அடுப்பு வழங்கும் திட்டங்கள்  முடக்க காலத்தில் அதிகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653807

***********



(Release ID: 1653953) Visitor Counter : 126