அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19 சவாலை எதிர்கொள்ள சர்வதேச மரபணு மாற்றங்களை கண்காணித்தல் மற்றும் வைரல் வரிசைகளை கணித்தல்
Posted On:
13 SEP 2020 2:21PM by PIB Chennai
கொவிட்-19 வைரஸ் தொற்றை எதிர் கொள்வதற்கான சிறந்த தீர்வை கண்டுபிடிப்பதற்காக, மரபணு மாற்றங்கள் மற்றும் வைரஸ் மற்றும் மனிதர்களில் சாத்தியமுள்ள மூலக்கூறு இலக்குகளை கண்டறிவதற்கு இந்தியா உட்பட உலகம் எங்கும் உள்ள சார்ஸ் கொவி2வின் மரபியல் வரிசைகளை இந்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது.
நாவல் கொரோனா வைரஸ் சவாலின் வேரை அடைவதற்காக அதை பல கூறுகளாக பிரித்து, பல்வேறு திசைகளிலிருந்து ஆராய்ந்து வரும் கொல்கத்தாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணை பேராசிரியர் டாக்டர் இந்திரஜித் சாஹாவும் அவரது குழுவினரும் இயந்திர கற்றலின் அடிப்படையில் வைரஸின் வரிசைகளை கணிக்கும் இணையம் சார்ந்த கொவிட் கணிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதோடு, 566 இந்திய சார்ஸ் கொவி2வின் மரபியலையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இந்த ஆய்வுக்கு நிதி உதவி அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653755
(Release ID: 1653832)
Visitor Counter : 209