ஜல்சக்தி அமைச்சகம்
ஜி20 வேளாண் மற்றும் நீர்வள அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய அரசின் முன்னுரிமைகளைப் பற்றி ஜல்சக்தி அமைச்சரும் வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சரும் எடுத்துரைத்தனர்
प्रविष्टि तिथि:
12 SEP 2020 8:46PM by PIB Chennai
இன்று நடைபெற்ற ஜி20 வேளாண் மற்றும் நீர்வள அமைச்சர்கள் மெய்நிகர் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் சார்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெருந்தொற்றை கையாளுவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிப்பதாகவும் தனது தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் தன்னுடைய தொடக்க உரையின்போது திரு ஷெகாவத் கூறினார்.
கூட்டத்தில் பேசிய இரு அமைச்சர்களும் தத்தமது துறைகளில் இந்திய அரசின் முன்னுரிமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653683
(रिलीज़ आईडी: 1653822)
आगंतुक पटल : 159