கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய நாடக சங்கப் பள்ளியின் புதிய தலைவராக மூத்த நடிகர் பிரகாஷ் ராவலை குடியரசு தலைவர் நியமித்தார்
प्रविष्टि तिथि:
12 SEP 2020 8:10PM by PIB Chennai
தேசிய நாடக சங்கப் பள்ளியின் புதிய தலைவராக மூத்த நடிகர் திரு பிரகாஷ் ராவலை குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நியமித்தார்.
இதைத்தொடர்ந்து திரு பிரகாஷ் ராவலை வாழ்த்திய மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அவரது திறன் பலனளிக்கும் என்றார்.
தேசிய நாடக சங்கப் பள்ளியின் தலைவராக திரு பிரகாஷ் ராவல் நான்கு வருடங்களுக்கு பதவி வகிப்பார். திரு ராவல் நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் மிகச்சிறந்த நடிகர் ஆவார்.
கடந்த 40 வருடங்களாக கலைச்சேவை ஆற்றி வரும் அவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2014ம் ஆண்டில், கலைத் துறைக்கான அவரது பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653678
(रिलीज़ आईडी: 1653820)
आगंतुक पटल : 205