தேர்தல் ஆணையம்
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2020 6:09PM by PIB Chennai
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்துதல் குறித்து அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2020-இல் வெளியிடப்பட்ட விரிவான விதிமுறைகளை தொடர்ந்து, இதுகுறித்து இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்துவதை மேலும் முறைப்படுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாற்றப்பட்ட விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை நாளிதழ், ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் மூன்று முறை வெளியிட வேண்டும்.
வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகு 4 நாட்களுக்கு பின்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653379
(வெளியீட்டு அடையாள எண்: 1653434)
வருகையாளர் எண்ணிக்கை : 196