பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்

प्रविष्टि तिथि: 11 SEP 2020 5:50PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்டிஐ) முழுவதுமாக செயல்படுவதாகவும், இதன் செயல்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் கூறினார்.

மூத்த தகவல் ஆணையர் திரு.டி.பி.சின்ஹாவுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் பேசிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், ஆடிஐ சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிவில் சொசைட்டி அமைப்பினர் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போதுதான், மத்திய தகவல் ஆணையத்துக்கு அற்பமான மற்றும் தேவையற்ற கேள்விகளின் சுமை குறையும் என அவர் கூறினார். தவிர்க்க கூடிய ஆர்டிஐ மனுக்களை  தகவல் அதிகாரிகள் பரிசீலிக்காமல் இருக்கலாம் என அவர் ஆலோசனை கூறினார். அரசுத் துறை தொடர்பான அனைத்து தகவல்களும் இணையதளங்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில், ஜம்மு & காஷ்மீரின் ஆர்டிஐ மனுக்களை, தகவல் ஆணைய அதிகாரிகள்  கடந்த மே 15ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டதை டாக்டர்.ஜித்தேந்திர சிங் பாராட்டினார்.  தற்போது இந்திய குடிமக்கள் யாரும், ஜம்மு & காஷ்மீர்  தொடர்பான தகவல்களை ஆர்டிஐ மூலம் பெறலாம் எனவும், அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1653371


(रिलीज़ आईडी: 1653425) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu