உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தர்பங்கா மற்றும் தியோகர் விமான நிலையங்களை ஆய்வு செய்ய செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Posted On: 10 SEP 2020 1:54PM by PIB Chennai

தர்பங்கா மற்றும் தியோகர் விமான நிலையங்களை ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 12ம் தேதி செல்கிறார்.  இந்த விமான நிலையங்களை விமான போக்குவரத்து துறை ஆணையம் மேம்படுத்தி வருகிறது. இந்த விமான நிலையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவுள்ளன.  இந்த நடவடிக்கை இந்த மண்டலத்தில் சுற்றுலா, பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்தும். 

தர்பங்கா விமான நிலையம்:
தில்லி, மும்பை, பெங்களூரிலிருந்து விமான போக்குவரத்தை தொடங்குவதற்காக தர்பங்கா விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமானப்படையிடம் இருந்து இந்த இடம் வாங்கப்பட்டது. இங்குள்ள ஓடு பாதையில் போயிங் 737-800 ரக விமானம் தரையிறங்க முடியும். ஒரே நேரத்தில் 100 பயணிகளை இந்த விமான நிலையம் கையாள முடியும். 

தியோகர் விமான நிலையம் 
டிஆர்டிஓ மற்றும் மாநில அரசுடன்  இணைந்து இந்த விமான நிலையத்தை விமான நிலைய ஆணையம் மேம்படுத்தி வருகிறது. ரூ.401.34 கோடி செலவில் இங்கு பணிகள்  நடக்கின்றன. இங்கு ஏர்பஸ் 320 ரக விமானத்தை இயக்க முடியும். ஜார்கண்ட் மாநிலத்தின் 2வது விமான நிலையம் தியோகர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652951



(Release ID: 1653090) Visitor Counter : 117