உள்துறை அமைச்சகம்
சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக மோடி அரசால் செயல்படுத்தப்படும் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டினார்
Posted On:
09 SEP 2020 4:01PM by PIB Chennai
மத்திய பிரதேசத்திலுள்ள சாலையோர வியாபாரிகளுடன் 'ஸ்வாநிதி சம்வாத்' என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக மோடி அரசால் நடத்தப்படும் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ள திரு அமித் ஷா, "இந்தியாவின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டில் தான் உள்ளது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க பிரதமர் நரேந்திரமோடி உறுதி கொண்டுள்ளார்," என்று தெரிவித்தார்.
"சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள பிரதமர் ஸ்வாநிதி திட்டம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் ஏழைகள் மீது அவருக்குள்ள அக்கறையின் விளைவாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த திட்டம் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு சேவை அளித்து வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர், கொரோனா நெருக்கடி காலத்தில் அவர்களின் வாழ்வாதாரங்களை மறு சீரமைக்க இத்திட்டம் உதவியதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1652634
(Release ID: 1652769)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam