அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரிய எரிசக்தித் துறையை மேம்படுத்த சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, துர்காப்பூர் மற்றும் என்ஐஎஸ்ஈ, குருகிராம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
08 SEP 2020 10:59AM by PIB Chennai
இணைய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதன் மூலம் சூரிய எரிசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, துர்காப்பூர் மற்றும் என்ஐஎஸ்ஈ, குருகிராம் ஆகியவை கைகோர்த்துள்ளன.
பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிரானி, இயக்குநர், சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ துர்காப்பூர் மற்றும் டாக்டர் அருண் குமார் திரிபாதி, தலைமை இயக்குநர், என்ஐஎஸ்ஈ, குருகிராம், ஆகியோரிடையே 2020 செப்டம்பர் 7-ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பல்வேறு சூரிய ஒளி தொழில்நுட்பங்களுக்காக ஒருங்கிணந்த கள ஆய்வுகளை நடத்துதல், பங்குதாரர்களின் திறன்களை வளர்த்தல், கொள்கை மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகளை நடத்துதல், தொழில்முனைவோருக்கு ஊக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் மதிப்பீடு ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் சில நோக்கங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652205
****************
(Release ID: 1652224)
Visitor Counter : 185