வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கொச்சி மெட்ரோவின் தாய்க்குடம்-பேட்டா தடம் தொடக்கம், நீர் மெட்ரோ கொச்சியில் வரவிருக்கிறது

प्रविष्टि तिथि: 07 SEP 2020 4:10PM by PIB Chennai

கொச்சி மெட்ரோவின் தாய்க்குடம் - பேட்டா தடத்தில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், கேரள மெட்ரோவின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

 

கொச்சி மெட்ரோவின் முதல் கட்டம் ரூ 6,218 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொச்சி மெட்ரோவின் இரண்டாவது கட்டத்துக்கான முன்மொழிதல் மத்திய அரசால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி மற்றும் கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கொச்சி மெட்ரோவின் தாய்க்குடம் - பேட்டா தடத்தில் சேவைகளைத் தொடங்கி வைத்தனர்.

 

ஜெர்மன் வங்கியான கே எப் டபுள்யூவின் நிதி உதவியோடு கொச்சி நீர் மெட்ரோ திட்டத்தை கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் செயல்படுத்தவிருக்கிறது. இம்மாதிரியான திட்டம் அமல்படுத்தப்படுவது நாட்டிலேயே இது தான் முதல் முறையாகும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651983

 

***********


(रिलीज़ आईडी: 1652043) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Telugu , Malayalam